சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, சூரி உட்பட பலர் நடித்து வரும் படம் ‘அப்பாடக்கர்’.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்தின் கதை என்னவென்றால்பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஜெயம்ரவி அங்கு அஞ்சலியை காதலிக்கிறார். வேலை தேடி சென்னை வரும் அவரை த்ரிஷா காதலிக்கிறார்.
இதை அறிந்து கொள்ளும் அஞ்சலியும், சூரியும் ஜெயம்ரவியை சென்னையில் சந்தித்து ரவி, த்ரிஷா காதலை உடைக்க பிளான் போடுவதும், அது சொதப்புவதுமான ஜாலியான கதைதான் படமாம். இந்தப் படத்தில் த்ரிஷா தன்னுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ அதே போலவே நடிக்கிறாராம்.
இதை அவரே சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அவர் தீவிர விலங்கு பிரியை என்று எல்லோருக்கும் தெரியும். இந்தப்படத்திலும் அப்படியே நடிக்கிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் முடிவடைகிறதாம். அதன் பிறகு மார்ச் 15ஆம் தேதி இசை வெளியீட்டையும், ஏப்ரல் முதல்வாரத்தில் படத்தையும் ரிலீஸ் செய்யவிருக்கிறதாம் படக்குழு.
No comments:
Post a Comment