Tuesday, 24 February 2015

அதெல்லாம் விஜய்க்கு தெரியவே தெரியாதாம்..?


ரஜினி நடிப்பில் வெளிவந்த ’லிங்கா’படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம் என்று போராட்டங்கள், நடத்தி வருகின்றனர் விநியோகஸ்தர்கள். மேலும் ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதமும் இருந்தனர். பின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதற்கு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தன்னால் 10% மட்டுமே தரமுடியும் என்று கூறினார். எனினும் அது போதாது என்றும், ரஜினி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது. கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இது குறித்து விஜய் தரப்பில் ,"விஜய் தற்போது 'புலி' படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை இழுத்தால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று நினைக்கிறார்கள். விஜய் எப்போதுமே யாருடைய பிரச்சினையிலும் தலையிட மாட்டார். விஜய்க்கும், 'லிங்கா' விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமில்லை" என்று மறுத்தனர்.
இந்த நிலையில் தான் விஜய்யின் ஒரு புகைப்படம் சமீபத்தில்வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த புகைப்படத்தில் விஜய்யும், இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சிங்காரவேலனும் நெருங்கி உள்ள படி இருக்கிறார்கள். இந்த ஒரு புகைப்படத்தால் இதில் விஜய்க்கு சம்பந்தம் இருக்குமோ என்று கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியது.
இந்த புகைப்படம் குறித்து விஜய் இதுவரை எந்த மறுப்பும் சொல்லாத நிலையில், அவரது தந்தையான எஸ்.ஏ.சியோ, லிங்கா படம் சம்பந்தமாக இப்படியொரு விஷயம் நடப்பதே விஜய்க்கு தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை தேவையில்லாமல் இந்த பிரச்சினைக்குள் இழுப்பது நியாயமே இல்லை என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment