கடந்த வருடம் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்திருக்கலாம் என புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி விமானிகளின் அறையில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை அண்டார்டிகாவை நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்த நிபுணர்களே இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ஆவணப் படமொன்றும் வெளியாகவுள்ளது.
எம்.எச். 370 விமானமானது அதன் இறுதி வானொலி அழைப்பின் பின்னர் 3 தடவை திரும்பியுள்ளதாகவும் இதன் விளைவாக தெற்கில் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்துள்ளதாக தடயங்களை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் விமானம் பல மணி நேரத்திற்கு பறந்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி 239 பேருடன் குறித்த விமானம் காணாமல் போனது.
No comments:
Post a Comment