Tuesday, 24 February 2015

நியூட்டனுக்கு முன்பே புவிஈர்ப்பு விசை பற்றி இந்தியருக்கு தெரியும்!!


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும், முன்னாள் இஸ்ரோ தலைவருமான மாதவன் நாயர், நியூட்டனுக்கு முன்பே இந்தியாவின் ஆரியபட்டர் பல வருடங்களுக்கு முன்பே அதனை கண்டுபிடித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
வேதங்கள் குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட மாதவன் நாயர் பேசுகையில், ’உலோகவியல், வானியல், கணிதம், கட்டிட கலை, அல்ஜீப்ரா மற்றும் ஜோதிடம் ஆகியவை குறித்த தகவல்களை மேற்கு உலகம் அறியும் முன்பாகவே, இந்திய வேதங்கள் மற்றும் பழமையான புனித நூல்களில் நமது இந்தியர்கள் கூறியுள்ளனர்.
வேதங்களில் ஒன்றில் உள்ள சில பாடல்களில், சந்திரனில் நீர் உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரும் இதனை நம்பவில்லை. சந்திரயான் மூலம், அதனை நாங்கள் கூற முடிந்தது. நாமே இதனை முதலில் கண்டுபிடித்துள்ளோம் என்று கூறியுள்ளதுடன், தூய சமஸ்கிருத மொழியில் இருப்பதால், வேதங்களில் உள்ள அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது.
ஆரியபட்டர் மற்றும் பாஸ்கரா ஆகியோர் கிரகங்களின் செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற கிரகங்கள் ஆகியவை குறித்து அதிக அளவில் ஆய்வு செய்து உள்ளனர். சந்திரயானுக்கு கூட, ஆர்யபட்டாவின் சமன்பாடு பயன்படுத்தப்பட்டு உள்ளது. புவி ஈர்ப்பு விசை பற்றி கூட 1,500 வருடங்களுக்கு பின்புதான் நியூட்டன கண்டுபிடித்துள்ளார். ஆனால் இது பற்றி நமது நூல்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரப்பா நாகரிகத்தின்போது கட்டிடங்களை கட்டுவதற்காக கணக்குகளை உருவாக்குவதற்கு வடிவியல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பித்தாகரஸ் தியரி வேத காலத்தில் இருந்து உள்ளது’ என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment