அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே பனி கொட்டி வருகிறது. நேற்று பனியுடன் கடும் குளிர் காற்றும் வீசியது. டெக்ஸஸ் மாகாணத்தில் கடும் பனி மற்றும் புயலால், இயல்பு வாழ்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முழுவதும் தடை பட்டுள்ளது. டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில், விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும், சுமார் 1300 விமானங்கள் நேற்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று வீசிய பனிப்புயலால், டல்லஸ், தெற்கு ஒக்லகோமா, மேற்கு அர்கன்சாஸ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்தது. பனிப் பொழிவுடன் காற்றும் கடுமையாக வீசியதால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
சாலைகள் மற்றும் வீடுகள் முற்றிலுமாக பனியால் நிரப்பப்பட்டிருந்தது. இந்த பனிக்கு இது வரை டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டும் 22 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிப் பொழிவால் மின்சாரமும் ஆங்காங்கே தடை பட்டுள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் நேற்று முழுவதும் விடுமுறை விடப்பட்டிருந்தன.
பனிப் புயலால் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க அமெரிக்க அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், டெக்ஸாஸில் இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
No comments:
Post a Comment