தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா மம்முட்டியுடன் நடிக்கும் ‘டாஸ்கர் தராங்கல்’ படத்தில் நடிப்பதற்காக கேரளா போயிருக்கிறார். அப்போது படப்பிடிப்பு நடந்த அரங்கிற்கு அருகே உள்ள மற்றொரு அரங்கில் இயக்குநர் சத்யன் அந்திக்காடு இருப்பதைக் கேள்விப்பட்டாராம்.
உடனே அங்கே சென்று அவரிடம் நலம் விசாரித்திருக்கிறார் நயன்தாரா . அப்போது இயக்குநர் சத்யன், “நான் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க முடியுமா, உங்களுக்கு நேரம் இருக்குமா?” என்று விளையாட்டாக கேட்டாராம். நயன்தாரா சாக்குப்போக்கு சொல்வார் என எதிர்பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி.
“உங்களுக்காக நாளையே கூட கால்ஷீட் ஒதுக்க நான் தயார்,” என்றாராம் நயன்தாரா. அவர் கேட்டதும் நயன் ஒப்புக்கொள்ள என்ன காரணம் என்றால், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘மனசினக்கரே’ என்ற மலையாளப் படம் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. அதனால் தான் நன்றி மறவாமல் ஓகே சொல்லிவிட்டாராம்.
No comments:
Post a Comment