தலைப்பை படிச்சதும் தப்பா நினைக்காதீங்க.. அவங்க ஆசைப்பட்டது கேப்டன் அமெரிக்கா படத்தில்...
கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் நடிப்பதற்கு தான் ஆவலாக இருப்பதாக ஹாலிவுட் நடிகையான கிறிஸ்டன் ஸ்டேவர்ட் (kristen stewart) தெரிவித்துள்ளார். சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு தான் மிகவும் விரும்புவதாக கிறிஸ்டன் ஸ்டேவர்ட் கூறுகிறார்.
"நான் அத்திரைப்படங்களை பார்த்துள்ளேன். அத்துடன் வித்தியாசமான பாத்திரங்களில் என்னால் நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவும் விரும்புகிறேன். அடுத்த கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் நான் நடிக்க முடியும் என நம்புகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கேப்டன் அமெரிக்கா: தி விண்டர் சோல்ஜர் எனும் திரைப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியி டப்பட்டிருந்தது. கிறிஸ் இவான்ஸ், ஸ்கார் லெட் ஜோன்ஸன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அடுத்த கேப்டன் அமெரிக்கா திரைப்படத்திற்கு கேப்டன் அமெரிக்கா சிவில் வோர் என பெயரிடப்பட்டுள்ளது.
2016 மே மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 வயதான கிறிஸ்டன் ஸ்டேவர்ட், தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொண்டு ஓய்வெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இரு வருடங்கள் திரைப் படங்களில் நடித்து வந்ததால் சிறிதுகாலம் தான் வீட்டிலிருப்பதற்கு விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment