பிப்ரவரி 2
1790
கட்ட பொம்மன் முடி சூடிய தினம்
ஆங்கிலேயர் ஆட்சியை வெறுத்த, வீரபாண்டிய கட்ட பொம்மன், பாளையங்குறிச்சிக் கோட்டையின் மன்னராக முடி சூடிய தினம் இன்று.
1760ம் ஆண்டு, தெலுங்கு வம்சாவழியைச் சேர்ந்த, ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு பாளையங்குறிச்சியில் ஜனவரி 3ம் நாள் பிறந்தார் கட்ட பொம்மன்.
இவரது இயற்பெயர் வீரபாண்டியன் என்பதாகும். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துனைவியார் பெயர், வீரசக்கம்மாள்.
இவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டவில்லை. இவர் அரசப் பொறுப்பிற்கு வரும் போது இவருக்கு வயது 30. இவரது ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள், இந்தியாவை வசப்படுத்தும் விதமாக, சிற்றரசர்களிடம் வரி வசூலித்து வந்தனர்.
இதனை முற்றிலுமாக எதிர்த்து நின்ற வீரபாண்டிய கட்ட பொம்மனிடமிருந்து ஆங்கிலேயர்களால் வரி வசூலிக்க முடியவில்லை. இதனால் 1797ம் ஆண்டு, ஆங்கிலேய தளபதி ஆலன் துரை தலைமையில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீது போர் தொடுத்தது கிழக்கிந்திய கம்பெனி.
இந்தப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை புறமுதுகு காட்டி ஓடவிட்டார். பொம்மனை வீரத்தால் வெற்றி கொள்ள முடியாத நிலையில், தந்திரமாக சந்திக்க அழைத்து கைது செய்ய திட்டமிட்டது கிழக்கிந்திய கம்பெணி.
வெகு நாட்கள் அலைக்கழித்தப் பின் செப்டம்பர் 10, 1798ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெணியின் மாவட்ட கலெக்டர் ஜாக்சன் கட்ட பொம்மனைச் சந்தித்து கைது செய்ய முயன்றார். ஆனால் இதில் சுதாரித்துக் கொண்ட பொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றார்.
1799ம் ஆண்டு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி தாக்குதலுக்குள்ளானது. இந்த தாக்குதலில் வீரபாண்டிய கட்ட பொம்மன் கோட்டையை விட்டு வெளியேற நேர்ந்தது. அதே ஆண்டு, அக்டோபர் 16ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியால் கட்ட பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.
1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.
1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
உலக சதுப்பு நில நாள்
No comments:
Post a Comment