Sunday, 1 February 2015

வாங்க ஒபாமா சைய்யா சைய்யா பாட்டுக்கு ஆடுவோம்: ஷாருக்கான்..!


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சைய்யா சைய்யா பாடலுக்கு நடனமாடுவதற்கு தான் விரும்புவதாக பாலிவூட் நட்சத்திரமான ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த 27 ஆம் தேதி நிகழ்வொன்றில் உரையாற்றுகையில்,
2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தான் மேற்கொண்ட முதல் பயணத்தை நினைவுகூர்ந்தார். "இந்தியர்களும் அமெரிக்கர்களும் உலகில் மிக கடினமாக பாடுபடும் மக்கள்.
ஷாருக்கான், மில்கா சிங், மேரி கோம் போன்றோர் உந்துசக்தியளிப்பவர்கள் என் அவர் கூறினார். அத்துடன் ஷாருக்கானின் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே திரைப்படத்தில் இடம்பெற்ற "சொனோரிட்டா. என ஆரம்பமாகும் இந்தி வசனத்தின் ஒரு பகுதியையும் ஒபாமா பேசிக் காட்டியபோது அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
அமெரிக்க ஜனாதிபதியின் உரையில் தனது பட வசனம் இடம்பெற்றமை குறித்து நடிகர் ஷாருக்கான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். "ஜனாதிபதி ஒபாமாவின் பாலின மற்றும் மத சமத்துவ உரையில் இடம்பெற்றமை குறித்து பெருமையடைகிறேன்.
அவர் பங்காரா நடனமாடாதமை கவலையளிக்கிறது. அடுத்த தடவை சைய்யா சைய்யா நிச்சயம்" என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஷாருக் கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் ஆகியோர் நடித்து கடந்த வருடம் வெளியான ஹாப்பி நியூ இயர் படத்தின் இந்திப் பதிப்பு 42 கோடி இந்திய ரூபாவை வசூலித்தது.
எனினும் கடந்த வருட வெளியான படங்களுக்கான விருதுப் பட்டியலில் ஷாருக்கானின் விருது எதற்கும் பரிந்துரைக்கப்படாதமை அவரின் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் சிறப்பாக நடிக்காதமையால் தனது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாமல் இருக்கலாம் என பெருந்தன்மையுடன் ஷாருக்கான் கூறியுள்ளார்.
"ஹெப்பி நியூர் படம் வசூலில் வெற்றி பெற்றது.
ஆனால் ஒரு நடிகராக நான் சிறப்பாக நடிக்கவில்லை. எனவே நான் விருதுக்கு தகுதியுடையவனல்ல என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment