Friday, 24 April 2015

Torrent-ல் அதிவேகமாக டவுன்லோடு செய்வது எப்படி??


Torrent ஆனது, இன்டெர்நெட்டில் இருந்து வீடியோ, ஆடியோ உட்பட அனைத்து வகையான டேடாகளையும் டவுன்லோடு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு சாஃப்ட்வேர் ஆகும்.
பெரும்பாலான நேரங்களில் இது குறைந்த அளவு கொண்ட ஃபைல்களை டவுன்லோடு செய்யவே மிகவும் திணறிக்கொண்டிருக்கும். இதனை எப்போதும் ஒரேபோல சீரான அதிக வேகத்துடன் டவுன்லோடு செய்ய சில திருத்தங்கள் செய்தால் போதும் அதிக வேகத்துடன் இது செயல்படும்.
எனினும், உங்கள் கணினிக்கு கிடைக்கும் இன்டெர்நெட் வேகத்தை பொருத்தே இதன் வேகமும் இருக்கும்.
பொதுவாக Torrent ஃபைல்களை டவுன்லோடு செய்யும் போது, அதிகளவில் Seeds இருக்கும் ஃபைலாக பார்த்து டவுன்லோடு செய்யவேண்டும்.
Settings-ல் உள்ள Connection பிரிவில் Add Windows Firewall exception என்பதை டிக் செய்யவும்.
Port என்ற கட்டத்தில் அதன் அளவை 10000-க்கும் அதிகமான நம்பரை பயன்படுத்தவும்.
ஃபைலை டவுன்லோடு செய்யும் போது, அதன் Upload லெவலை 80% ஆகவும், பாதிக்குப் பின்பு Upload லெவலை குறைத்து விடலாம். அப்போது தான் டவுன்லோடிங் வேகமாக நடைபெறும்.
Bandwidh பகுதியில் Max upload rate மற்றும் Max download rate ஆகியவற்றை Unlimited அதாவது ‘0’ என்று வைக்கவும்.
Global Max number of connections என்பதன் அளவு 2500 என்ற அளவிலும், Max number of connected peers per torrent என்பது 500 என்றும் செட் செய்ய வேண்டும்.
இறுதியாக அட்வான்ஸுடு செட்டிங்ஸ் பிரிவில் செய்யவேண்டிய மாற்றங்கள்.
bt.allow_same_ip என்பதை True எனவும்,
gui.show_notorrents_node என்பதை False எனவும்,
rss.update_interval என்பதை 20 எனவும் செட் செய்யவும்.
அவ்வளவு தான், Apply என்பதை கிளிக் செய்து Torrent-ஐ ரி ஸ்டார்ட் செய்யவும்.

No comments:

Post a Comment