கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திருமண தேதியை அவர்கள் அறிவிக்க வில்லை. இதனால் திருமணத்திற்குப் பின்பு த்ரிஷா நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உலா வந்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் அதற்கு எதிர்மாறாக நடிகை த்ரிஷா அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் கூறுகின்றன. இது ஒருபுறம் இருக்கையில் கடந்த சில நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவர்கள் இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், அதனால் 'பிரேக்-அப்' ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள். அதோடு 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பின் த்ரிஷாவுக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் த்ரிஷா தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அது வருண்மணியனுக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.
இதனிடையே, சமீபத்தில் வருண்மணியன் வீட்டில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவிற்கு த்ரிஷா செல்லவில்லையாம். அதோடு நிச்சய மோதிரத்தையும் த்ரிஷா அணியாமலேயே இருக்கிறார் என தெலுங்கு மீடியாக்கள் காரணம் சொல்கின்றன. இது குறித்து த்ரிஷா தரப்பில் விசாரித்த போது எல்லாம் வதந்தி என்று கூறப்பட்டது. அதோடு எல்லாம் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் கூறினர்.
No comments:
Post a Comment