Monday, 27 April 2015

ஜெர்மன் பெண்ணுடன் ஆட்டம்!!! முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித்!!!


இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் ஒரு பாலிவுட் பாடலுக்கு ஜெர்மன் பெண்ணுடன் ஆடிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஷாருக்கானின் வெற்றிப்படங்களுள் ஒன்றான, ‘கல் ஹோ நஹோ’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தான் இவர் ஆடியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் சயீப் அலிகான் ஆகியோர் நடித்திருந்தனர்.
2003-ல் வெளிவந்த இப்படத்தை 8 நிமிட வீடியோ படமாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மைக்கேல் ஸ்டீனர் வெளியிட்டுள்ளார். இதில் ஷாருக்கானாக அவரும், சயீப் அலிகானாக சல்மான் குர்ஷித்தும், ப்ரீத்தி ஜிந்தாவாக மைக்கேல் ஸ்டீனரின் மனைவி எல்சாவும் நடித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றது.
வீடியோ கீழே!!!

No comments:

Post a Comment