பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், இயந்திரம் பொருத்தப்பட்ட பாராசூட்டில் பறந்து தினமும் தனது வேலைத்தளத்துக்குச் சென்று வருகிறார். 51 வயதான போல் கொக்ஸ் எனும் இந்நபர், வடக்கு வேல்ஸ் பிராந்தியத்தில் வசிக்கிறார். 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது வேலைத்தளத்துக்கு இந்த பராமோட்டரில் அவர் பறந்து செல்கிறார்.
தெளிவான வானிலை உள்ளபோது மணி நேரத்திற்கு 12 மைல் வேகத்தில் இதில் பயணம் செய்ய முடியும். அரை மணிநேர பயணத்தின்பின் தரையிறங்கியபின் சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டி ஒன்றில் இப்பராமோட்டரை போல் கொக்ஸ் மடித்து வைத்துவிடுவார்.
8000 ஸ்ரேலிங் பவுண் (சுமார் 16 லட்சம் ரூபா) பெறுமதியான இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கு பிரித்தானிய விமானப்படையின் அனுமதியை அவர் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment