Thursday, 30 April 2015

ரூபிக்ஸ் கியூப்ஸை 5.25 நொடிகளில் தீர்த்து புதிய உலக சாதனை…!!


அமெரிக்காவைச் சேர்ந்த கொலின் பர்ன்ஸ் எனும் இளைஞர், ரூபிக்ஸ் கியூப் எனும் கனசதுரப் புதிரை 5.25 வினாடிகளில் தீர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஹங்கேரியைச் சேர்ந்த சிற்பியும் கட்டடக் கலை பேராசிரியருமான எர்னோ ரூபிக் என்பவரால் 1974 "ரூபிக்ஸ் கியூப்' (ரூபிக் கன சதுரம்) விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 6 பக்கங்கள் கொண்ட பெரிய கன சதுரத்தில் 5 அடுக்குகள் கொண்ட சிறு கனசதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும்.
(வீடியோ கீழே)
இந்த சிறு கன சதுரங்களை 6 புறமும் திருப்பி அமைக்கக்கூடிய வகையில் அவை அமைக்கப்பட்டிருக்கும். இந்த சிறு கனசதுரங்களை மிக குறைந்த நேரத்தில் 6 பக்கங்களிலும் ஒரே வண்ணம் வரும்படியாக மாற்றி அமைப்பதில் இந்த விளையாட்டின் திறமை அடங்கியுள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற ரூபிக்ஸ் கியூப் போட்டியில் பங்குபற்றிய கொலின் பர்ன்ஸ் எனும் இளைஞன் 5.25 வினாடிகளில் போட்டியை நிறைவுசெய்து சாதனை படைத்தான்.
இதற்குமுன், நெதர்லாந்தைச் சேர்ந்த மெத்ஸ் வோல்க் என்பவர் 5.55 வினாடிகளில் இப்புதிரை நிறைவு செய்தமை இதுவே உலக சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment