கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பூ பார்வதி, ஊர்வசி, மறைந்த இயக்குநர் பாலசந்தர் உட்பட பல பிரபலங்கள் நடிப்பில் இன்று ரிலீஸாக இருந்த படம் ’உத்தமவில்லன்’. கமல் நடிப்பில் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் படம் என்பதாலும், மறைந்த இயக்குநர் பாலசந்தர் நடித்துள்ள கடைசி படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே விஸ்ரூபம் எடுத்திருந்தது.
இதனால் முதல் 3 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் புக் செய்யப்பட்டு விட்டன. தற்போது ரசிகர்கள் பேனர், கட்அவுட், தோரணங்கள் எனதிரையரங்குகளை திருவிழா போல கொண்டாட தொடங்கிவிட்டனர். இதுவரை மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ரசிகர்கள் தற்போது கொதிப்படைந்துள்ளனர்.
காரணம் இன்று வெளியாக இருந்த உத்தமவில்லன் திரைப்படத்தின் காலை காட்சிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. படத்தயாரிப்பாளருக்கும் பணம் கொடுத்த ஃபைனான்சியருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு அடுத்த காட்சிகள் திரையிடப்படுமா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் காலை கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்னொரு பக்கம் மதியம் காட்சிகள் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உத்தம வில்லன் பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment