Tuesday, 28 April 2015

ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ: கொலைவெறியில் சுற்றும் இயக்குநர்!!


ராதிகா ஆப்தேவின் நிர்வாண குறும்படக் காட்சி தான் இப்போதைக்கு இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறது.
எந்தப் பக்கம் பார்த்தாலும், அவர் புகைப்படம் தான். இந்நிலையில், இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநர் அனுராக் கஷ்யாப், இந்த வீடியோவை பரப்பியவர் ஒரு இந்தியர் தான் என்றும், அவனை என்வாழ்நாளில் எப்படியாவது கண்டுபிடித்து தண்டனை கொடுப்பேன் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து மும்பையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும், காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த வீடியோவை பரப்பியவரை கண்டிப்பாக பிடித்து விடுவோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
”என் குறும்படத்தின் கதை ஒரு உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த ஒரு காட்சியாலேயே, இந்த குறும்படத்தை எடுப்பது எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது. இந்த காட்சியை படம்பிடிக்கும் போது, எனது படக்குழு முழுவதும் பெண் உதவியாளர்கள் மட்டுமே இருந்தனர். இது தவிற குறும்படத்தை, போஸ்ட்-புரொடெக்ஷன் செய்யும் போது இந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும், அகற்றிவிட்டோ அல்லது, தணிக்கை செய்து விட்டோ தான் கொடுத்தோம்.
இப்படி இருக்க அந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் எங்கிருந்தோ எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. இந்த காரியத்தை செய்தவன் ஒரு இந்தியனாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் மேற்கு நாட்டவர்களுக்கு இதை விட ஆபாசமான பல வீடியோக்கள் கிடைக்கின்றன. மேற்கு நாட்டவர்கள் இப்படிப்பட்ட சின்ன வீடியோவை பார்க்க ஆசைப்பட மாட்டார்கள்.
இந்த படம் எடுக்கப்பட்டதும், இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானி அவர்களின் தாய் உட்பட என் நண்பர்கள் பலருக்கு காண்பித்தேன். இதில், விக்ரமாதித்யா மோத்வானியின் தாய், இந்த படத்தை பார்த்து விட்டு கண் கலங்கிவிட்டார். இது போன்ற ஒரு படத்தை தான் பார்த்ததே இல்லை என்றுக் கூறினார். படத்தில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும், இந்த படம் நடித்தற்காக பெருமை கொள்வதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் காட்சி மட்டும் தவறான நோக்குடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை மக்கள் ரசிக்க வில்லை. இதை வைத்து காமெடி செய்கின்றனர். இப்போது, இந்த வீடியோவால் ராதிகா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். நானே அதற்கு காரண மாகிவிட்டேன். ஆனால், இந்த காரியத்தை செய்தவர் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் சிக்குவார்.
வேறு ஒருவரின் ஒரு நொடி குஷிக்காக எங்களை முற்றிலுமாக டேமேஜ் செய்துவிட்டனர். தற்போதைய நடிகைகளில் மிகவும், தைரியம் மிக்கவர் ராதிகா ஆப்தே. அவர், ஒரு முற்போக்கு சிந்தனை வாதி. அவர் போன்ற பல நடிகைகள் உருவாக வேண்டும். ஆனால், இந்த மாதிரி பரவும் வீடியோ சர்ச்சைகளால், ராதிகா ஆப்தே போன்ற நடிகைகளுக்கு இக்கட்டான சூழல் உருவாகிறது.
இந்த காரியத்தை செய்தவன் மீது நான் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறேன். என் வாழ்நாளில் எப்படியாவது அவனைக் கண்டு பிடித்து உரிய தண்டனை கொடுப்பேன்.”
இப்படியாக எரிந்து விழுந்துள்ளார் இயக்குநர்.

No comments:

Post a Comment