கடந்த வாரம் பெரிதாக எந்த பெரிய படங்களும் ரிலீஸாகவில்லை என்பதால் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி ஆகிய இரண்டு படங்களுமே இந்த வாரமும் வசூலை குவித்து வருகிறது.
ராவணன், கடல் என தொடர் தோல்விகளை கொடுத்த துவண்டு கிடந்த மணிரத்னத்திற்கு 'ஓ காதல் கண்மனி' படம் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் மட்டும் இப்படம் சுமார் ரூ.6 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்தது.
அதேபோல் காஞ்சனா படமும் நல்ல வசூலை குவித்து வருகிறது. தற்போது இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது. இதில் காஞ்சனா-2 ரூ 3.75 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஓ காதல் கண்மணி ஏ செண்டர் ஆடியன்ஸுகளுக்கான படம் என்பதால் மால் மற்றும் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் நல்ல வசூல வந்துள்ளதாம். இப்படம் ரூ 2.04 கோடி வசூல் ஈட்டியுள்ளது என கூறப்படுகிறது.
நண்பேன்டா படம் 4 வாரங்கள் முடிவில் 2.33 கோடி வசூலித்துள்ளதாகவும், கொம்பன் படம் 4 வார முடிவில் 2.89 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment