Thursday, 30 April 2015

பிரச்சாரத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்த அரசியல்வாதி….!


ஜப்பானிய அரசியல்வாதி ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்கான சுவரொட்டியில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வலதுசாரி வேட்பாளரான டெருக்கி கோட்டோ எனும் இந்த அரசியல்வாதி, ஜப்பானின் பாரம்பரிய சாமுராய் வாள் ஏந்தியவாறு நிர்வாண கோலத்தில் காணப்படுகிறார்.
டெருக்கி கோட்டோவின் பெயர் மூலம் அவரின் அந்தரங்கப் பகுதி மறைக்கப்பட்டுள்ளது. இவர் உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றில் டோக்கியோ பிராந்தியத்திலுள்ள சியோடோ தொகுதியில் போட்டியிடுகிறார். ஜப்பானிய வேட்பாளர்கள் தமது பெயர் எழுதப்பட்ட பட்டியலொன்றை உடலில் அணிந்துகொண்டு ரயில் நிலையங்களில் நின்றுகொண்டு பயணிகளுக்கு வந்தனம் கூறுவது வழக்கமாகும். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பிரசுரங்களே அச்சிட அனுமதி வழங்கப்படும்.
டெருக்கி கோட்டோவின் நிர்வாண பிரசார சுவரொட்டி குறித்து ஜப்பானிய தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜப்பானிய தேர்தல் சட்டங்களின்படி இவ்வாறு போஸ் கொடுப்பது தடைசெய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment