WhatsApp, விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்நேரத்தில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி இது. பல மில்லியன் மக்கள் WhatsApp-ஐ பயன்படுத்துவதாக அதன் உரிமையை பெற்றுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை பயன்படுத்தும் போது நிறைய பேருக்கு நிறைய சந்தேகங்கள் வருவதுண்டு. அதாவது, தற்போது சிம்கார்டுகள் பயன்படுத்த முடியாத படி வரும், ஐபேட், டேப்லட் போன்றவற்றில் WhatsApp எப்படி பயன்படுத்துவது என்று. நிச்சயம் பயன்படுத்த முடியும். ஆனால் அதற்கு உங்களது கருவியிலும், உங்கள் வீட்டிலும் WiFi கனெக்ஷன் இருக்க வேண்டும்.
WiFi மூலம் கிடைக்கும் இணைய இணைப்பைக் கொண்டு WhatsApp அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யவும்.
அதனை இன்ஸ்டால் செய்த பின்பு, உள்ளே செல்லவும். உங்கள் மொபைல் நம்பர் கேட்கும் போது நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு மொபைல் நம்பரை கொடுக்கவும்.(அந்த நம்பர்-ல் நீங்கள் WhatsApp பயன்படுத்தியிருக்க கூடாது).
அப்போது வெரிஃபிகேஷன் கோட் நீங்கள் கொடுத்த நம்பருக்கு மெஸேஜ் அனுப்பப்படும். அந்த கோடினை நீங்கள் இதில் கொடுத்து WhatsApp-ஐ வெரிஃபை செய்து எப்போதும் போல WhatsApp பயன்படுத்தலாம்.
குறிப்பு: நீங்கள் வெரிஃபிகேஷனுக்காக கொடுத்த எண்ணில் ஒரு போதும் WhatsApp-ஐ அதே நம்பர் கொடுத்து பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் தாங்கள் தற்போது பயன்படுத்தும் டிவைஸில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
No comments:
Post a Comment