Thursday, 30 April 2015

உங்கள் கணிப்பொறியை வேகமாக்குவது எப்படி??


இப்போதெல்லாம் கணிப்பொறி வாங்குவதை விட அதனை பராமரிப்பதில் தான் அதிக சிரமம் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் சிஸ்டம் ஸ்லோவாக மாறுவது தான்.
உங்கள் கணிப்பொறியை ஆன் செய்து உள்ளே நுழைவதற்கே நீண்ட நேரம் ஆகும். அந்த வகையில் சில மாற்றங்களை செய்தால் போதும் உங்கள் கணிப்பொறி வேகமாக மாறிவிடும்.
தேவையில்லாதவற்றை Uninstall செய்யவும்:
நீங்கள் உங்கள் கணிபொறியில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தேவையில்லாத சாஃப்ட்வேர்களை Uninstall செய்யவும். இது உங்கள் கணிப்பொறியை சிறிது வேகமாக்க உதவும்.
தேவையில்லாத Temp Fileகளை நீக்கவும்:
நாம் எப்போதும் வேலை செய்து முடித்ததும் தேவையில்லாத ஃபைல்களை நீக்கி விடுவோம். ஆனால் உங்களுக்கு தெரியாமல் சில ஃபைல்கள் உங்களின் C:\-ல் இருக்கும். அவற்றை அடிக்கடி (வாரம் ஒருமுறையாவது) கிளியர் செய்து விட வேண்டும். இல்லையெனில் இது உங்கள் கணிப்பொறியின் வேகத்தை குறைத்து விடும்.
இதனை நீக்க C:\windows\temp என்று சென்று அதில் இருக்கும் அனைத்து ஃபைல்களையும் டெலிட் செய்துவிடவும். அதே போல, Run-ல் %temp% என்று டைப் செய்து ஒப்பன் ஆகும் ஃபோல்டரில் இருக்கும் ஃபைல்களையும் டெலிட் செய்யவும்.
ஹார்டு டிஸ்க்:
உங்களின் கணிப்பொறிக்கு ஹார்டு டிஸ்க் தேர்வு செய்யும் போது, நல்ல ஹார்டு டிஸ்க்கை தேர்வு செய்து வாங்க வேண்டும். சில ஹார்டு டிஸ்க்குகள் இயல்பாகவே ஸ்லோவாக தான் இயங்கும். எனவே சற்று தரமான ஹார்டு டிஸ்க்காக பார்த்து வாங்கவும்.
ஹார்டு டிஸ்க் ஸ்டோரேஜ்:
உங்கள் ஹார்டு டிஸ்க் 85%க்கும் அதிகமாக ஃபுல் ஆக கூடாது அப்படி அதிகமானால், நிச்சயம் உங்கள் சிஸ்டம் அவ்வளவும் தான். மிக மிக ஸ்லோவாக மாறிவிடும். மீறி வேண்டுமெனில், வேறொடு ஹார்டு டிஸ்க்கை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
துவக்க அப்ளிகேஷன்கள்:
உங்கள் கணிப்பொறி ஆன் ஆகும் போதே சில அப்ளிகேஷன்கள் ஓபன் ஆகிவிடும். அவற்றை முதலில் குறைக்க வேண்டும். உங்கள் கணினி ஆன் ஆகும் போது உங்களின் Anti-Virus மட்டும் வேலை செய்தால் போதுமானது. மற்றவற்றை Disable செய்து விடவும்.
அதற்கு Run-ல் msconfig என்று டைப் செய்து உள்ளே நுழையவும். அதில் தேவையில்லாததை Disable செய்து விடவும்.
ராம்:
உங்கள் சிஸ்டத்தில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று RAM இது எவ்வளவு அதிகம் இருக்கின்றதோ அவ்வளவு வேகமாக உங்கள் கணிப்பொறி வேலை செய்யும். பொதுவாக 4GB RAM போதுமானது. இதுவே உங்கள் கணிப்பொறியை வேகப்படுத்த போதுமானதாகும்.
Disk Defragment:
இதனை செய்ய My Computer சென்று அதில் Right click செய்து Properties-ல் Tools ஆப்ஷனில் Defragment இருக்கும் இது உங்கள் சிஸ்டத்தினை வேகப்படுத்த உதவும்.
Disk Clean UP:
டிஸ்க் க்ளீன் அப் என்பது உங்கள் சிஸ்டத்தில் இருக்கும் தேவையில்லாத டேட்டாக்களை க்ளீன் செய்ய உதவும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இது உங்கள் கணிப்பொறியில் Start> All Programs> Accessories> System Tools> Disk Clean Up என்பதை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment