ஆந்திர வனப்பகுதியில், தமிழகக் கூலித்ட் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு ஆந்திர டி.ஜி.பி., ராமுடு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 7ம் தேதி, திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில், தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்று சர்ச்சையான கருத்துக்கள் உலவி வரும் வேளையில், சம்பவத்தில் பலியான சசிகுமார் என்பவரி மனைவி முனியம்மாள் தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை கொலை வழக்காக மாற்றி, என்கவுண்டரில் ஈடுபட்ட போலீஸாரை குற்றவாளிகளாக சேத்து, இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர அரசைக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இதுகுறித்த வழக்கை விசாரிக்க 8 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை ஆந்திர அரசு நியமித்தது.
இந்நிலையில், என்கவுன்டர் தொடர்பான ஆவணங்கள் மொத்தத்தையும் ஆந்திர அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி, சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி. ராமுடு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment