Thursday, 30 April 2015

அவர்களின் மர்ம உறுப்பை துண்டிக்க வேண்டும்.. டாப்ஸி ஆவேசம்

தற்போது காஞ்சனா 2 வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்ஸி. அவரது சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அவர் நடித்துள்ள, வை ராஜா வை நாளை வெளியாகிறது. கூடவே காஞ்சனா 2 படத்தின் தெலுங்குப் பதிப்பு கங்காவும் நாளை திரைக்கு வருகிறது.
ஆடுகளம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான டாப்ஸிக்கு அந்த படத்திற்கு பிறகு வேற எந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றிப்படமாவது கொடுக்க வேண்டும் என்றும் முனைப்பில் இருந்தார் டாப்ஸி. அவருக்கு கைக்கொடுத்தார் லாரன்ஸ்.
காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தில் டாப்ஸியை நடிக்க வைத்து அவரை வெற்றி நாயகியாக முன்னேற்றிவிட்டார். தற்போது காஞ்சனா 2 படம் பட்டித்தொட்டியெங்கும் கல்லாவை கட்டி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த டாப்ஸியிடம், காஞ்சனா 2 படம் பற்றி கேட்டப்போது, காஞ்சனா 2 படத்தில் நடித்தது எனக்கு சேலஞ்சிங்காக இருந்தது. எனக்கு மட்டுமில்லை ராகவா லாரன்ஸ் சாருக்கும் அப்படித்தான். முதல்ல, இந்த படத்தில் நடிக்க மாட்டேன், ரொம்ப ரெஸ்பான்ஸிபிளான வேடம் என்று மறுத்தேன். பிறகு லாரன்ஸ் தான் பேசி நடிக்க வைத்தார் என்றார்.
மேலும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது மற்றும் இணைய தளங்களில் ஆபாச வீடியோக்கள் பரப்புபவர்கள் பற்றி கருத்து கேட்டபோது, கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது நல்ல விஷயம். திருமணம் செய்துகொண்டபின் விவாகரத்து பெற்று பிரிவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
லிவ்விங் ரிலேஷன்ஷிப் பொறுத்தவரை அந்த பிரச்னை இல்லை. பிரச்னை என்றால் இருவரும் சந்தோஷமாக பிரிந்துவிடலாம். நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளிவருவது பற்றி கேட்கிறார்கள். அதுபோன்ற படங்களை வெளியிடுபவர்களின் மர்ம உறுப்பை துண்டிக்க வேண்டும்’ என்று ஆவேசத்துடன் கூறினார் டாப்ஸி.

No comments:

Post a Comment