கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முருகதாஸ் எந்த ஹீரோவை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படம் தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
ஆனால் படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். தற்போது இப்படம் முடியும் நிலையில் உள்ளது.
படம் பற்றி முருகதாஸ்யிடம் கேட்டபோது. கதை என்பது ஒரு மெல்லிய நூல் மாதிரி, அந்த நூலைக் கொண்டு நாம் எதையும் செய்யமுடியும். அப்படித்தான் அகிரா படத்தை செய்திருக்கிறேன். அதனால்தான் கேரக்டருக்கு அகிரா என்று நாயகி பெயரை வைத்திருக்கிறேன். கொஞ்சமும் மௌனகுரு சாயல் தெரியாது.
படம் பேசப்படும் என்று நான் உறுதி சொல்ல மாட்டேன். எப்போதுமே என் படங்கள் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று நான் சொன்னதில்லை. ஆனால் ரசிகர்களால் பேசப்பட்டிருக்கு. ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்கிறோம. அதை எப்போதுமே நான் நிறைவாக செய்திருக்கேன்.
மௌனகுரு படம் எனக்கு பிடித்தப்படம் மட்டுமல்ல என்னை வேறு விதமாக சிந்திக்க வைத்த படம் ஒரு படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் சோனாக்ஷியை வித்தியாசமாக பார்க்கலாம் என்கிறார் முருகதாஸ்.
No comments:
Post a Comment