இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பெயர் நேற்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.
கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா சராசரியாக 55.05 சதவீத ரன்களை எடுத்துள்ளார். மேலும், கடந்த உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்றும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோரிடம் இருந்தும் இது குறித்து ஆலோசனை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment