"கலக்கபோவது யாரு", "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" மற்றும் "நம்ம வீட்டு கல்யாணம்" உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரம்யா.
இவருக்கும் அபராஜித் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. ஆனால், அதற்குள் திருமண வாழ்வு சலித்து விட்டதா? என்று தெரியவில்லை, தன் கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளாராம் ரம்யா.
இதற்கு காரணம் திருமணமான பிறகு, குடும்பத்தை கவனிக்காமல், முன்பு எப்படி மாலை நேர விருந்துகள், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாரோ, அதே போலத்தான் திருமணத்துக்குப் பிறகும் இருக்கிறாராம். இது அபராஜித் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதோடு தற்போது சினிமாவில் நடிக்கவும் கவனம் செலுத்துகிறாராம்.
சமீபத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் கூட நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றனவாம். எனவே திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்ட ரம்யா, உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கணவரிடம் கூறிவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம்..
No comments:
Post a Comment