அஜித் தும்மினால் கூட அதை ஹேஸ் டேக் செய்து டுவிட்டரில் டிரெண்டாக மாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
அந்த வகையில் நேற்று அஜித் பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியிருக்கிறார், என்றும் அந்த காரை வடபழனி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கொண்டுவந்தபோது எடுத்த படங்கள் என வெள்ளைநிற பிஎம்டபிள்யூ ஐ8 காரின் படங்களும் இணையம் முழுக்க வலம் வந்தன.
அவரது ரசிகர்கள் இதை டிரெண்டாக கூட மாற்றினர். மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த காரை இந்தியாவிலேயே மிக குறைந்த பிரபலங்களே இதை வாங்கியுள்ளனர். அஜித் கார் பந்தயத்தில் பிரியம் கொண்டவர் என்பதால், அவர் இதை வாங்கியிருக்கக் கூடும் என்று நம்பினார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால், இது குறித்து அஜித் தரப்பிடம் கேட்ட போது, அடபோங்கப்பா இது அஜித்தின் கார் இல்லை, அப்படி எதையும் அவர் வாங்கவும் இல்லை.. ஏன் இப்படி வதந்தியை கிளப்பிறீங்க என கூறினர்.
No comments:
Post a Comment