ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 27வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பஞ்சாப் அணியை 20 ரன்களால் அமோக வெற்றியை பெற்றது. இந்த 8வது ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதினர்.
இந்த ஆட்டமானது மொகாலிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய ஷிகர்தானும், டேவிட் வார்னரும் ஆடினர். இதில் ஷிகர் தவான் (1) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹனுமா விகாரி (9) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இன்னுமொரு ஆரம்ப ஆட்டக்காரரான அணித்தலைவர் வார்னர் சற்று நிலைத்து நின்று அரைச்சதம் தாண்டி (58) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹென்ரிக் (30) ரன்களையும், நமன் ஓஜா (28) ரன்களையும், ஆட்டமிழக்காமல் ஆஷிஸ் ரெட்டி (22) ரன்களையும் எடுத்தனர்.
ஆட்டநேர முடிவில் சன்ரைசர்ஸ அணி 20 ஒவர்களில் 6விக்கட்டை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஜான்சன், அக்ஷாரா படேல், ஆகியோர் தலா 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு 151 என்ற ரன் இலக்குடன் ஆடிய அந்த அணி 20 ஒவர்களில் 9விக்கட்டை இழந்து 130 ரன்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.
இதனால் பஞ்சாப் அணி 20 ரன்களால் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் அதிககூடிய ரன்னாக ரித்திமான் சாகா (42) ரன்களையும், அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி (22) ரன்களையும் அக்ஷாரா படேல் (17) ரன்களை அடித்தனர். ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 3விக்கட்டுக்களையும், புவனேஸ்குமார் 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் பிரகாசித்த போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment