யு-டியூப், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் படங்களின் டீஸர் அல்லது டிரைலர் வெளியானால் எப்படி வரவேற்பு இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அனைத்து சமூக தளங்களுமே கதி கலங்கி நிற்கும். அப்படி ஒரு வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கும். அப்படி தான் தற்போது சூர்யா படத்திற்குகிடைத்திருக்கிறது.
'அஞ்சான்' என்ற மாபெரும் தோல்வி படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’மாஸ்’. இப்படத்தின் டீஸர் இரண்டே நாளில் 11 லட்சம் ஹிட்ஸ்களை யுடியூபில் கடந்துள்ளது. உண்மையிலேயே ஒரு பரபரப்பான டீஸராக இந்தப் படம் இருப்பதை அஜித், விஜய் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை போல.
ஏனென்றால், இந்த டீஸருக்கு அவர்கள் கடுமையான கமெண்ட்டுகளைப் போட்டு வருகிறார்கள். 11 லட்சம் பேர் ஒரு டீஸரைப் பார்க்கிறார்கள் என்றால் பலரும் அது எப்படியிருக்கும் என்ற ஆசையில் பார்ப்பதுதான் அந்த அளவிற்கு ஹிட்ஸ் வரக் காரணமாக அமைகிறது.
இப்படி ஒரு வரவேற்பு சூர்யாவிற்குக் கிடைப்பதை, அஜித், விஜய் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததன் விளைவே அப்படிப்பட்ட கமெண்ட்டுகள் என்றும் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment