கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார் என்று பரபரப்பான செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ளார் சச்சின்.
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் மனைவியின் பெயர் அஞ்சலி. இந்த தம்பதியருக்கு சாரா என்ற மகளும் அர்ஜுன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இதை ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
தற்போது மகள் சாராவுக்கு 18 வயதாகிறது. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அண்மையில் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து தன் பதிலை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது… “எனது மகள் திரைப்படத்தில் நடிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி. அவர் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment