Wednesday, 29 April 2015

நியூயார்க் நீதிபதியாக சென்னைப் பெண் பதவியேற்பு!!


நியூயார்க் நகர குற்றவியல் நீதிபதியாக சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நகரின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நேற்று முன் தினம் பதவியேற்றார். நியூயார்க்கின் மேயர், பில் டி பிளாசியோ அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மனி என்ற பெருமையை பெறுகின்றார்.
43 வயதாகும் ராஜராஜேஸ்வரி தனது 16ஆம் வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அவர் முன்னதாக ரிச்மாண்ட் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதவி வகித்தார். இவருடன் 27 பேர் நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர்.
இவர் தனது தாயாரின் பெயரில் பத்மாலயா என்ற நாட்டிய அகாடமியை நடத்தி வருகின்றார்.

No comments:

Post a Comment