Tuesday, 28 April 2015

மீண்டும் வந்தார்.. தனுஷிடம் சென்றார்..!


’ஓ காதல் கண்மனி’ படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
80-களில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அடையாளத்துடன் வந்தவர் மணிரத்னம். அவர் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெற்றிபெறவில்லை என்றதும் அவருடைய படங்களை ரசிகர்கள் பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்தினர். அதுவும் கடல் படத்தை பார்த்துவிட்டு மணிரத்னத்திடம் சரக்கு இல்லை, அப்படி, இப்படி என்று விமர்சனம் செய்தனர்.
இதனால் மறுபடியும் ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் மணிரத்னம். அதனால் அலைபாயுதே பட பாணியில் ’ஓ காதல் கண்மனி’ படத்தை இயக்கினார். தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதை அடுத்து மணிரத்னம் மீண்டும் வந்துவிட்டார் என்று பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிரத்னம் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் என்றும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மணிரத்னம் அடுத்ததாக தமிழ், இந்தி என இரு மொழிகளில் படத்தை இயக்க இருக்கிறாராம். ஏற்கனவே தனுஷ் இந்தியில் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ என இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்ததால் தனுஷுக்கு இந்தியில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இதன் காரணமாக தனுஷை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘சூதாடி’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் வேலைகள் முடிந்த பிறகு மணிரத்னம் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment