Tuesday, 28 April 2015

வெளிவந்தது ரகசிய புகைப்படங்கள்.. அதிர்ச்சியில் பிரியாமணி


பருத்திவீரன் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரியாமணி. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் பருத்தி வீரன் அளவிற்கு பெயர் சொல்லும் படங்கள் அவருக்கு அமையவில்லை.
கடந்த 2 வருடமாக தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் பிரியாமணி கன்னடம், மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். தற்போது அங்கேயும் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவருடைய வீட்டில் திருமண பேச்சு அடிப்பட்டுவருகிறது. முதலில் மௌனமாக இருந்த இவர் பின் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் திரைத்துறையில் இல்லை என்று புதிர் போட்டார். தற்போது ஒரு இளைஞருடன் பிரியா மணி இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதை வைத்து பார்க்கையில் இவர் தான் அந்த காதலர் என கூறப்படுகிறது. அவருடைய பெயர் முஸ்தபாவாம் ராஜ். முஸ்தபாவைக் காதலித்து வந்ததை படு ரகசியமாக வைத்திருந்த பிரியா மணி, அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சத்தமில்லாமல் போய் வந்துள்ளாராம். அதுதொடர்பான படங்கள் இப்போது கிடைத்துள்ளன. இந்த படங்கள் எப்படி வெளிவந்தது என்று தெரியாமல் பிரியா மணி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளாராம்.

No comments:

Post a Comment