Saturday, 25 April 2015

சூர்யாவை ஃபாலோ செய்யும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்..!


இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருப்பவருமான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் தனது தோழி பிரியங்கா சவுத்ரியை திருமணம் செய்துக்கொண்டார் என்பதை அனைவரும் அறிந்ததே.
இவர்களுடைய திருமணம் டெல்லியில் உள்ள போஷ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ரெய்னாவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் டுவைன் பிராவோ, மைக் ஹசி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங், மல்யுத்த வீரர் சுஷீல் குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தன் டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருந்தார் சூர்யா. தற்போது சுரேஷ் ரெய்னா தன் டுவிட்டரில் சூர்யாவை பாலோ செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் ரஜினி மற்றும் சூர்யாவை மட்டும் தான் பாலோ செய்கிறார் என்பதே குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment