இன்று மதியம் டெல்லி உட்பட இந்தியாவின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வின் மையப்புள்ளி நேபாளத்தின் பகோரா என்ற இடத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுமார் 2 நிமிடங்கள் வரை நீடித்துள்ள இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 7.4 magnitude என்ற அளவுக்கு பதிவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், லக்னோ மற்றும் வட இந்தியாவின் சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால், பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நில நடுக்கம் ஏற்பட்ட உடன் மக்கள் அனைவரும் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறியதால் டெல்லி மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகளில் பரபரபு ஏற்பட்டது. மற்றபடி இந்த நில நடுக்கத்தால் டெல்லி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
டெல்லியில் நடந்த நில நடுக்கத்தின் அளவு 6.0 வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அதிர்ச்சி சென்னையின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment