விஜய் டி.வியையும் அதற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தையும் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
விஜய் டி.வியை ஸ்டார் நிறுவனம் வாங்கிய பிறகு பல புதிய நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர்கள், லைவ் ஷோக்கள் மூலம் முதல் இடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. புதிய படங்களை திரையிடுவதிலும் மற்ற சேனல்களை முந்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டி.வியிலிருந்து, விஜய் பிளஸ் என்ற புதிய சேனல் விரைவில் வர இருக்கிறது. புதிய சேனலின் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் பிளஸ் ஒளிபரப்பை துவங்குவதாக இருந்தது. ஆனால் புதிய சேனலுக்கு லைசென்ஸ் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் ஒளிபரப்பும் தள்ளிப்போகிறது.
வருகிற தீபாவளிக்கு முன்னதாக விஜய் பிளஸ்சை கொண்டு வர நிர்வாகம் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. "விஜய் பிளஸ் முழுக்க முழுக்க பொழுபோக்கை மையமாக கொண்டிருக்கும், குறிப்பாக இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிறைய இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய விளையாட்டு போட்டிகள் தமிழ் வர்ணனையுடன் விஜய் பிளஸ்சில் இடம் பெறும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டி.வி நேரடி ஒளிபரப்பு செய்தபோது அதன் வழக்கமான நிகழ்ச்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஸ்டார் பிளஸ் தொடங்கப்பட்டால் இதுபோன்ற நேரடி நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாகும், அடுத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தையும் ஸ்டார் குரூப் வாங்க இருக்கிறது. அப்போது விஜய் பிளஸ்சில் அது நேரடியாக ஒளிபரப்பும். என்கிறது விஜய் பிளஸ் வட்டாரம்.
No comments:
Post a Comment