தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஊர்வசி.
இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஊர்வசி தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.
தனது 46வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து உத்தமவில்லனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சங்க துவக்க விழாவுக்கு ஊர்வசி குடித்துவிட்டு வந்து சில அட்டகாசங்களை செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து யு-டியூப்பில் விட்டிருக்கின்றனர்.
ஊர்வசி போதையில் இருப்பது தெரியாத நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், மேடையில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து மைக் முன் வந்த ஊர்வசி, சரமாரியாக உளற ஆரம்பித்துள்ளார். ‘இது பி.ஜே.பி. நடத்தும் கூட்டமா அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணி நடத்தும் கூட்டமா என அவர் உளறியதால் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து ஊர்வசியை பேச அனுமதித்தால் துவக்க விழா நிகழ்ச்சி கேலிக்குரியதாகிவிடும் என கருதிய பொறுப்பாளர்கள், பேச்சை நிறுத்துமாறு சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்புவதற்காக காருக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர், நிகழ்ச்சி பொறுப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு வருவதற்குள் விழா குழுவினர் படாதபாடு பட்டுவிட்டனர். அவரது இந்த உளறல் பேச்சு வீடியோவை யு-டியூபில் பலரும் பார்த்துவருகின்றனர். வீடியோ கீழே...
No comments:
Post a Comment