தெரிந்து கொள்வோம்: கொலுசு அணிவதற்கான காரணம்
கொலுசு அணிவது தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா, மெசபடோமியா, எகிப்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கம்.
இன்று பெரும்பாலும், பெண்கள் மட்டுமே கொலுசு அணிந்தாலும், பழங்காலத்தில் ஆண்களும் கொலுசு அணிந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. இன்று ஒற்றைக் காலில் கொலுசு அணிவது, புது ஃபேஷனாகி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தில் சிலம்பு கொலுசு உள்ளிட்ட அணிகலன்களுக்கு தனி மவுசு உண்டு. ஆன்மீக ரீதியாக பெரிய காரணங்கள் இல்லை என்றலும், ஒரு பெண் மங்களகரமாக முழுமையடைவதில் கொலுசு பெரும் பங்காற்றுது நிதர்சனம். கணவனை இழந்து விதவையான பெண்கள் எந்த அணிகலன்களும் அணிவதில்லை என்பதில் இருந்து அது விளங்கும்.
கொலுசு அணிவதன் காரணங்கள்
பொதுவாகவே உலோகங்கள் வெப்பக்கடத்திகளாக செயல்படுபவை. மேலும், இவற்றை நாம் அணிவதால், உடலில் குளிர்ச்சி ஏற்படும். ஏன் வெள்ளி என்றால், நகைகளால் ஒவ்வாமை ஏற்படுவோருக்கு கூட வெள்ளியால் ஒவ்வாமை ஏற்படுவது கிடையாது.
இது தவிற தங்கத்தில் லட்சுமி குடி இருப்பதாகவும், ஆதலால் தான், பொதுவாக கை, கழுத்து போன்றவற்றில் தங்க நகைகளையும், காலில் வெள்ளி அணிகலன்களையும் அணிகிறோம் என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.
ஆண்களை விட பெண்களுக்கு பால் உணர்ச்சி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. கொலுசு கனுக்காலில் உள்ள நரம்புகளில் படும் போது, பெண்களின் உணர்ச்சி கட்டுப்படுத்தப் படும் என்பதும், ஒரு நம்பிக்கை.
ஒருவரை ஒருவர் அடையாளம் கானும் பொருட்டும் கொலுசு போடும் வழக்கம் இருந்திருக்கலாம். இதே போல், குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது, அவை அன்னையை விட்டு அகன்று சென்றால், குழந்தையை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கு கொலுசு உதவுகிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - நிறைவு
ரிஷபம் - பயம்
மிதுனம் - முயற்சி
கடகம் - பாசம்
சிம்மம் - ஓய்வு
கன்னி - வெற்றி
துலாம் - நன்மை
விருச்சிகம் - சிரத்தை
தனுசு - செலவு
மகரம் - அன்பு
கும்பம் - வரவு
மீனம் - சுகம்
No comments:
Post a Comment