குழந்தையை பெற்று தனது ஆபீஸ் டிராயரில் அடைத்து வைத்த குழந்தை இறந்ததால், அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மெக்சிகோவைச் சேர்ந்தவர் கிம்பர்லி. கர்பமாக இருந்த இவர், சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளார். அலுவகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பிரசவவலி வந்துள்ளது.
இவர் உதவிக்கு யாரையும் கூப்பிடாமல், யாரிடமும் கூறமல் அலுவலக டாய்லெட் சென்று அங்கு ஒரு ஆண் குழந்தையையும் பெற்றுள்ளார். பின்னர், தொப்புள் கொடியை தானகவே ஒரு கத்தரிகோல் உதவி மூலம் கத்தரித்துக் கொண்டுள்ளார்.
குழந்தையை யாருக்கும் தெரியாமல், ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து தனது அலுவலக டிராயரில் வைத்து பூட்டியுள்ளார். இந்த சம்பவம் யாருக்குமே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டப்பட்ட அந்த குழந்தை மூச்சு விட முடியாமல், மூச்சு திணறி இறந்து விட்டது.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், கிம்பர்லியை கைது செய்தனர். மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
No comments:
Post a Comment