Thursday, 30 April 2015

’ஐ’யினால் வந்த சிக்கல்... தயாரிப்பாளரிடம் சொத்துகளை பிடிங்கிய வங்கி


தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், பிரமாண்ட தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். 'அந்நியன்', 'தசாவதாரம்', ’ஐ’ உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்தவர்.
ஆரம்பத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்தவர், தற்போது மெகா பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகிறார். கடைசியாக வந்த ஐ படத்தை 75 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார்.
அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார். அதாவது சுமார் 100 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் படத்தயாரிப்பில் முதலீடு செய்தார் ஆஸ்கார் ரவி. அதன் காரணமாக கடனில் சிக்கினார். ஐ படத்தின் பேரில் பல கோடி கடன் பெற்ற ஆஸ்கார் ரவி, கடனை அடைக்காமலே சாமர்த்தியமாக படத்தை வெளியிட்டார். இது தொடர்பாக ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுவரை கடனைச் செலுத்தாத காரணத்தால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு மற்றும் மூன்று திரையரங்குகள் ஆகியவற்றை கையப்படுத்தி இருக்கிறது ஐஓபி வங்கி. இது குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 28ம் தேதி முதல் மூன்று சொத்துக்களை கையகப்படுத்தி இருக்கிறோம். சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள வீடு, வேலூரில் உள்ள திரையரங்கம் மற்றும் சேலத்தில் உள்ள சந்தோஷ், சப்னா மற்றும் சாந்தம் திரையரங்குகள் ஆகியவை இதில் அடக்கம் என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை வங்கி கையகப்படுத்தி இருப்பது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ படத்தின் வசூல்தான் அமோகம்.. அதுக்கும் மேல என்று சொல்லிக் கொண்டிருந்தாரே ஆஸ்கர் ரவி அப்புறம் ஏன் கடனை கட்ட வில்லை... அதில் இந்த கடனை கட்ட வேண்டியதுதானே! ஆனால் ஆஸ்கார் ரவி மிகப்பெரிய கில்லாடி.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையில் பாதிக்குக்கூட தேறாது. திட்டமிட்டே இந்த ஏல ஏற்பாட்டுக்கு வழிவிட்டு வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment