காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமானவர் அர்ச்சனா. தீடிரென திருமணம் செய்துக்கொண்டு சென்னைக்கும், தொகுப்பாளர் தொழிலுக்கும் குட் பை சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
தற்போது அமெரிக்கா அலுத்துப்போய் சென்னை வந்து முக்கிய பட விழாக்களுக்கு காம்பியரிங் செய்துக்கொண்டிருக்கிறார். அதோடு ஷாஜி–கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் இனியா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு அக்காவாக அர்ச்சனா நடிக்கிறார்.
இப்படத்தில் இனியாவுக்கும், அர்ச்சனாவுக்கு ஒரே கசமுசாவாம். காரணம் இனியாவை விட அர்ச்சனா ரொம்ப கலராக இருக்கிறாராம். எல்லா விளக்குகளையும் நிறுத்திவிட்டு ஷுட்டிங் செய்தாலும் அவருடைய முகம் மட்டும் வெளிச்சமாக தெரிக்கிறதாம்.
இதை பார்த்த இனியா எங்கே ரசிகர்கள் தன்னை கலாய்த்து விடுவார்களோ என்று இந்த படத்தின் ஹீரோயின் நான்தான். உங்க பக்கத்துல நிக்கும்போது என்னைவிட நீங்க கலரா இருந்தா அது நல்லாவா இருக்கு? அதனால் நீங்க நாளையில் இருந்து டல் மேக்கப் போட்டுட்டு வாங்க என்றாராம்.
அதற்கு அர்ச்சனா அதை நீ சொல்லக் கூடாது. டைரக்டர் சொல்லட்டும். என்னைவிட நீ அழகா இருக்கணும், கலரா இருக்கணும்னா அவ்வளவு தானே இருக்கவே இருக்கு, கலர். எடுத்து பூசிக்க வேண்டியது தானே என்று எகிற, ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒரே கசமுசா சத்தம். அப்புறம் நாலு பெரிய மனுஷங்க உள்ளே பூந்து, சண்டையை தீர்த்து வைத்தார்களாம். என்னம்மா அங்க சத்தம்...
No comments:
Post a Comment