பவர் ஸ்டார் என்றாலே காமெடிக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம். அதேபோல் கூட்டத்துக்கும் பஞ்சம் இருக்காது. மேடையில் இவர் பேசுவதை ரசிக்கவே (கலாய்க்க) ஒரு கூட்டம் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பற்றி தினமும் செய்திகள் வருகிறதோ இல்லையோ....ஆனால் பவர் ஸ்டாரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் நான்தான் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் பவர் ஸ்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு அதிரடியாக அறிக்கையை வெளியிட்டுள்ளார் பவர். “யார் விருது வாங்குறாங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்னா விசில் சத்தம் காதை பிளக்குதுன்னு பாருங்க… ரஜினி, அஜித்துக்கு அப்புறம் என்னோட பேருக்குதான் அந்த விசில் சத்தம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இதனால் சினிமா வட்டாரங்களிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஏதாவது ஏடாகூடமாக பேசி வம்பில் மாட்டிக்கொள்வார்.. இப்போது இந்த பேச்சுக்கு என்னென்ன கமெண்ட் வரபோகுதோ..?
No comments:
Post a Comment