Tuesday, 28 April 2015

அந்தமானுக்கு அருகில் இருக்கும் மர்மத்தீவு!! உங்களுக்கு தெரியுமா??


வங்காள வளைகுடாவில் இருக்கும் அந்தமானுக்கு அருகில் இருக்கும் ஒரு மர்மத் தீவை பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா??
சென்டினல் தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவில் இருக்கும் பழங்குடியினர் சுமார் 60ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருவதாக கருதப்படுகின்றது.
இங்கிருக்கும் மனிதர்கள் இன்றும் கற்கால மனிதர்கள் போலவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கும் வெளி உலகினருக்கும் தொடர்பே கிடையாது. இவர்கள் இதுவரை வெளிநாட்டினர் யாரையும் தங்கள் தீவுக்குள் அனுமதித்ததே கிடையாதாம்.
அந்த தீவின் அருகில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் பறந்து சென்றாலும், கற்கலையும், அம்பு ஈட்டி போன்றவற்றை கொண்டு தாக்குகின்றனராம்.
2006-ல் தீவின் அருகில் மீன் பிடிக்க சென்ற இருவரை அவர்கள் கொன்றுவிட்டனர். 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி இந்த தீவை தாக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment