நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தால் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து நேபாளத்துக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்த நில நடுக்கத்தால் பல்வேறு புராதன சின்னங்கள் அழிந்த நிலையில், சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடங்களும் அழிந்துள்ளது. அதனால் நடிகைகள் சமந்தாவும், ஹன்சிகாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விக்ரம், சமந்தா ஜோடியாக நடிக்கும் 10 எண்றதுக்குக்குள்ள என்ற படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் நேபாளத்தில் நடந்தது.
விக்ரம், சமந்தா இருவரும் நேபாளத்தில் பல நாட்கள் முகாமிட்டு இதில் நடித்தார்கள். பூகம்பத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்களும் சேதமடைந்து விட்டன. இது சமந்தாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளத்தில் நேபாள பூகம்ப சேத படங்களை வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறும் போது நேபாளத்தில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படப்பிடிப்பு நடந்தது. அந்த பகுதிகள் நில நடுக்கத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. இதை கேள்விப்பட்டதும் நான் அதிர்ச்சியானேன். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய காத்மாண்டு மற்றும் பக்தாபூர் ஆகிய இடங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதையெல்லாம் செய்திகளில் பார்க்கும் போது என் இதயம் நொறுங்குவது போல் இருக்கிறது என்றார்.
மேலும் பல நடிகைகள் நேபாள பூகம்ப சேதத்துக்கு அனுதாபம் வெளியிட்டு உள்ளனர். ஹன்சிகா கூறும் போது நேபாள பூகம்ப பாதிப்பில் இருந்து அங்குள்ள மக்கள் மீள பிரார்த்திக்கிறேன் என்றார். த்ரிஷா கூறும் போது நேபாள பூகம்ப விபத்து இதயத்தை நொறுக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment