நேபாளில் கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 970 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், நான்கு நாட்களுக்கு சிறிய அளவு நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் சற்று சக்திவாய்ந்ததாகவே இருந்தது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை 2700 இறந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி பலியானவர்கள் எண்ணிக்கை 4000த்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்தும் மீட்புபடைகள் மற்றும் நிவாரணப்பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை காரணம் காட்டி ஒரு லிட்டர் குடிநீர் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment