சீனாவிலுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர், தனது வகுப்பிலுள்ள மாற்றுத் திறனாளியான மாணவர் ஒருவரை தனது முதுகில் சுமந்துகொண்டு பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.
18 வயதான ஸியி ஸு எனும் மாணவரும், 19 வயதான ஸாங் சீ எனும் மாணவரும் ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஸுஸோ நகரின் உயர்நிலைப் பள்ளியில் சந்தித்து நண்பர்களாகினர். நோய் ஒன்றினால் ஸாங் சீயின் தசைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் சுயமாக நடந்துசெல்வது சிரமமாக உள்ளது. இந்நிலையில் தனது நண்பனான ஸாங் சீ பள்ளிக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக தனது முதுகில் அவரை சுமந்து செல்கிறார் ஸியி ஸு. 1.73 மீட்டர் உயரமான ஸியி ஸு 75 கிலோ எடையைக் கொண்டுள்ளார்.
பள்ளிக்குள்ளும் ஸாங் சீ செல்ல வேண்டிய இடங்களுக்கு அவரை தனது முதுகில் ஸியி ஸு சுமந்துசெல்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமது பள்ளிக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியுள்ளனர். உணவு வாங்கி வருதல், ஆடைகளை கழுவிக்கொடுத்தல் போன்றவற்றிலும் தனது நண்பருக்கு ஸியி ஸு உதவுகிறார். கல்வியில் மிகுந்த ஆர்வமுள்ள இவ்விரு மாணவர்களுமே தமது வகுப்பில் அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்கள் கற்கும் பள்ளியின் துணைத் தலைவரான குவோ சுன்க்ஸி கருத்துத் தெரிவிக்கையில், இவ்விரு மாணவர்களின் நடவடிக்கைகள் மிக உணர்ச்சிகரமானவை. இவர்கள் உறவினர்கள் அல்லாத போதிலும் ஸியு ஸு கடந்த 3 வருடங்களாக தனது நண்பருக்கு இவ்வாறு உதவி வருகிறார்" என்றார்.
No comments:
Post a Comment