இத்தாலிய மிலான் நகரிலிருந்து துருக்கிய இஸ்தான்புல் நகருக்கு பயணித்த துருக்கிய விமானசேவை விமானம் ஒன்றின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதால் அந்த விமானம் துருக்கிய அதாதுர்க் விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.
விமான இயந்திரத்தில் தீ ஏற்பட்டதும் அந்த விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விமானி துரிதமாக செயற்பட்டு அந்த விமானத்தை திசைமாற்றி தரையிறக்க நடவடிக்கையை மேற்கொண்டார்.
அந்த விமானம் தரையிறங்கும் போது அதன் வலது பக்க சக்கரம் சேதமடைந்ததாகவும் அதனால் அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் செல்ல நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ, அங்கு தயாராக தீயணைப்பு வாகனங்கள் உடன் காத்திருந்த தீயணைப்புப் படைவீரர்களால் அணைக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்படி ஏர்பஸ் ஏ-320 விமானத்திலிருந்த 97 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் எவருக்கும் காயங்களோ அன்றி வேறு பாதிப்புக்களோ ஏற்படவில்லை என விமான சேவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment