தமிழ் சினிமாவில் கடந்த 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இடையே காதல் தோல்வி, கல்யாணத் தோல்வியில் துவண்டு கிடந்த அவர்ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது செகண்ட் ரவுண்டை தொடங்கி தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது இருக்கும் நடிகைகளில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். இவர் கைவசம் இது நம்ம ஆளு, தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாஸ், மாயா என்று அரை டஜன் படங்கள் உள்ளன. இதில் மாஸ் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கிற கூட்டம் தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது தனக்கு எப்போதுமே பிடித்தில்லை என்று கூறுகிறார் நயன்தாரா.
அதனால், தன்னை மொத்த கூட்டமும் எந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது உற்று கவனிக்கிறதோ அப்போது இயக்குநர் சொல்லி, கூட்டத்தை கொஞ்சம் வெளியேற்றுங்கள். அத்தனை கண்களும் என்னை மொய்ப்பதால் என்னால் நடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. கவனம் சிதறுகிறது என்கிறாராம் நயன்தாரா.
அதனால், நயன் நடிக்கும் பெரும்பாலான கிளுகிளு காட்சிகளெல்லாம் இயக்குநர், கேமராமேன் உள்பட சிலரது முன்னிலையில் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறதாம்.
No comments:
Post a Comment