ஐப்பானைச் சேர்ந்த இளம்பெண்ணொருவரின் கைவண்ணம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.
ஓவியக்கலை மூலம் பல்வேறு விதமான எண்ணங்களை தத்துரூபமாக வெளிப்படுத்த முடியும் என்பதை பல மாயத்தோற்றகளை வரைந்து 20 வயதான Hikaru Cho என்ற இளம் பெண் ஓவியர் அசத்துகிறார்.
அவர் தன் எண்ணங்களில் தோன்றுபவையை மிக நேர்த்தியாக வரைந்து பார்ப்பவர்களை மிரட்டுகிறார்.
Hikaru கற்பனை மூலம் மனித உடல் மீது முப்பரிமாண ஓவியங்களை வரைவதில் வல்லவராக உள்ளார். இவ்வாறு வரையப்படும் படங்களின் மூலம் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று அனைவரையும் கவர்ந்து இழுக்கிறார்.
முழுவதும் முப்பரிமாணத்தில் காணப்படும் இவரது ஓவியங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்வதோடு, தற்போது உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கிழே...
No comments:
Post a Comment