Wednesday, 29 April 2015

விளம்பரத்திற்காக நிர்வாண வீடியோவை பரப்பினாரா ராதிகா ஆப்தே..?


நடிகை ராதிகா ஆப்தே, சர்வதேச குறும்படம் ஒன்றிற்கு ஆடையை விலக்கிக் காட்டி நடித்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன், நடிகை ராதிகா ஆப்தே, இயக்குநர் அனுராக் கஷ்யாப் (Anurag Kashyap) இயக்கத்தில் ஒரு குறும்படம் நடித்தார். இந்த குறும்படத்தின் ஒரு காட்சியில், ராதிகா ஆடையை விலக்கி தன் மர்ம உறுப்பை முழுவதுமாக காட்டுவது போல் படமாக்கப்பட்டது.
கதைக்கு அந்தக் காட்சி தேவை என்பதால் அப்படி நடித்ததாகவும், அதில் நடித்தது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் ராதிகா பேட்டி அளித்திருந்தார். மேலும் இந்தியா தவிர மற்ற வெளிநாடுகளில் மட்டுமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே இக்காட்சியில் நடித்தாராம்.
ஆனால் அவர் நடித்த நிர்வாண வீடியோ வாட்ஸ் அப்களிலும் இணைய தளங்களிலும் பரவி உள்ளது. யாரோ திருட்டுத்தனமாக இதை வெளியிட்டு விட்டனர். இந்த வீடியோ வெளியானதை பார்த்து படத்தின் இயக்குநர் அனுராக் கஷ்யப் அதிர்ச்சியடைந்தார். வீடியோவை கசிய விட்ட மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் நிர்வாணமாக நடித்த ராதிகாவை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வற்புறுத்தி உள்ளது. அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திரைப்படங்களை தணிக்கை செய்ய தணிக்கை குழு இருக்கிறது. படங்களில் இடம் பெறும் ஆபாச காட்சிகளை அக்குழுவினர் வெட்டி எறிந்த பிறகே ரிலீஸ் செய்ய அனுமதிக்கின்றனர். சட்ட திட்டங்களை மீறி யாரும் நடிக்க கூடாது. நிர்வாணமாக நடிப்பது தணிக்கை குழு சட்ட திட்டங்களுக்கு மீறிய செயல் ஆகும்.
ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்ததுடன் அந்த படங்கள் இணைய தளம், வாட்ஸ் அப்களிலும் பரவி உள்ளது. தணிக்கை குழுவை மீறி இந்த வீடியோவை பரவ விட்டுள்ளனர். விளம்பரத்துக்காக ராதிகா ஆப்தே தரப்பினரே இதை செய்ததாக கருத வேண்டிய உள்ளது. இந்த வீடியோ சிறுவர்களை பாலியல் குற்றங்களுக்கு தூண்டுவது போல் உள்ளது.
எனவே ராதிகா ஆப்தேவையும் படத்தின் இயக்குநரையும் கைது செய்ய வேண்டும். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்படும் என்று அந்தஅறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment