ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன்மேன் என்று பல சூப்பர் ஹீரோக்கள் ரவுண்டு கட்டி ரகளை செய்யும் படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. 2012-ல் இதன் முதல் பாகமான ’அவெஞ்சர்ஸ் அசம்பிள்’ வெளியாகி பாராட்டிலும், வசூலிலும் சக்கை போடு போட்டது.
இந்த சீரிஸின் இரண்டாவது பாகமான, ’அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் ராபர்ட் டௌனி, கிரிஸ் இவான்ஸ், க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கேர்லெட் ஜோஹன்சன், மார்க் ருப்பல்லோ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வெளியான இரண்டே நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இப்படம். வசூலில் சக்கைப்போடு போடும் இப்படத்துடன் ராபர்ட் டௌனியின் உலகப் புகழ் கெட்டப்பான ‘அயன் மேன்’ படத்தின் கெட்டப்பும் நிறைவு பெறுகிறது. படம் வெளியாகி 5 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னனும் படத்தின் கிரேஸ் குறைந்த பாடில்லை.
இப்போது அவெஞ்சர்ஸ் படத்தின் ரசிகர்களுக்கு சிறப்பு செய்தியாக இவ்வருடத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வ ப்ளூ ரே டிவிடிக்களை படக்குழுவே வெளியிட உள்ளனர். முக்கியச் செய்தியாக டிவிடியில் நீக்கப்பட்ட காட்சிகள், மற்றும் அதிகமான சீன்களுடன் வெளியாக உள்ளது. மேலும் ஒரு ஆச்சர்யம் டிவிடியில் அடங்கியுள்ளது என படக்குழு சர்ப்ரைஸும் வைத்துள்ளனர்.
இந்த டிவிடிக்களுக்கான முன் பதிவுகளும் துவங்கிவிட்டது. அதிகாரப்பூர்வ மார்வெல் இணையதளத்திற்கு மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிடி எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment